பெங்களூரு நகரில் உள்ள மோசமான சாலையை நிலவின் மேற்பரப்புடன் ஒப்பிட்டு வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூரில் விண்வெளி வீரர்கள் அணியும் உடையணிந்த நபர் ஒருவர் நகரின் முக்கிய சாலை ஒன்றில் மிகவும் மெதுவாக நடந்து செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. சாலை மிகவும் மோசமான நிலையில் மேடாக பள்ளமாக உள்ளதால் அந்த நபர் நடக்கும்போது அது கிட்டத்தட்ட சந்திரனின் மேற்பரப்பு போன்ற தோற்றத்தில் உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.